பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் தண்டனை: அவசர சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

வியாழன், 17 டிசம்பர் 2020 (08:33 IST)
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் தண்டனை:
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை அடுத்து அந்நாட்டு அரசு பாலியல் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்தது 
 
நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான அவசர சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது 
 
இந்த நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து இந்த சட்டம் உடனடியாக அந்நாட்டில் அமலுக்கு வருகிறது 
 
பாலியல் குற்றங்களுக்கு எத்தனை வருடம் தண்டனை கொடுத்தாலும் தண்டனை அனுபவித்துவிட்டு மீண்டும் வெளியே வரும் அந்த குற்றவாளிகள் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த அவசர சட்டத்திற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் இது மனித உரிமையை மீறும் சட்டம் என்றும் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்