இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணுகளுக்கிடையேயான 5 ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருந்த நிலையில் 4 வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தவே 93 ரன்னில் ஆல் அவுட் ஆகியது. அதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி மிக எளிதாக வெற்றி பெற்றது.