கூகுள் அசிஸ்டெண்டையும் விட்டு வைக்காத இந்தியர்கள்!

புதன், 30 ஜனவரி 2019 (16:37 IST)
கூகுள் அசிஸ்டெண்ட் என்பது ஸ்மார்ட்போன்களில் நமக்காக உதவி செய்யும் கூகுள் சேவை. கூகுள் அசிஸ்டெண்ட் பொதுவாக நமக்கு ஸ்மார்ட்போனில் இருந்து என்ன வேண்டும் என கேட்கிறோமோ அதை நமக்கு எளிதாக செய்து கொடுக்கும். 
 
இதற்காக இணையத்தில் உள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்டு சுமார் 70 பில்லியன் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லும் வகையில் இந்த கூகுள் அசிஸ்டெண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கூகுள் அசிஸ்டெண்ட் ஒரு பெண்ணின் குரல் என்படஹி நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 
 
இப்போதுதான் இந்தியர்களின் குசும்பு ஆரம்பித்துள்ளது. ஆம், இந்தியர்கள் கூகுள் அசிஸ்டெண்டிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என கேட்டுள்ளனர். இது போன்று பல முறை பலர் கேட்டதும் கடுப்பான கூகுள் நீங்கள் ஏன் கூகுள் அசிஸ்டெட்டிடம் திருமணம் செய்யசொல்லி கேட்கிறீர்கள் என டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
இதற்கு பலர், நாங்கள் சிங்கில்ஸ், 90ஸ் கிட்ஸ் இன்னும் திருமணம் ஆகவில்லை என பதில் தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்