ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

vinoth

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:54 IST)
ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஆயிரக் கணக்கான வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த தொடரில் தற்போது இந்திய வீரர்கள் சிலர் நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். அதையடுத்து கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.  அதே போல ஹாக்கி போட்டியிலும் இந்திய அணி முன்னேறி வருகிறது. இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதற்கான தகுதிச் சுற்றில் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன் மூலம் அவர் நேரடியாக இறுதிச் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 84 மீ தூரம் எறிந்தாலே நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்பதால் அவர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்