ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் வீரர் நூல் இழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் தற்போது பாரிஸ் நகரில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியானது வழக்கத்தை விட சர்ச்சைகளுக்கும், காமெடிகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. ஆச்சர்யமூட்டும் அனுபவங்களை தந்த ஒலிம்பிக்ஸ் கேம்ஸில் உயரம் தாண்டுதலில் ஒரு காமெடியான சோகமும் நடந்துள்ளது.
கோல் ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்டனி அமிரட்டி என்ற வீரர் பங்கேற்றார். கோலை ஊன்றி தடுப்பை அவர் தாண்டியபோது தடுப்பில் இருந்த கம்பில் அவரது ஆண் குறி பட்டதால் அது தவறி கீழே விழுந்தது. இதனால் அந்த போட்டியில் 12வது இடத்திற்கு தள்ளப்பட்ட அவர் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தனது குறியால் ஒருவர் தோல்வி அடைந்ததை குறித்து பலரும் காமெடியும், சோகமுமாக பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் பதக்கம் வென்றிருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகியிருக்க மாட்டார். தற்போது ஒரே இரவில் உலக பேமஸ் ஆகி விட்டார் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K