இந்திய அணி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தனது முதல் டி 20 போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3.1 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.