168 ரன்கள் எடுத்தால் வெற்றி! மும்பையை தோற்கடிக்குமா ராஜஸ்தான்?

ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (21:59 IST)
இன்று நடந்த முதல் போட்டியில் சென்னை அணி சூப்பர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் இரண்டாவது போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது.,
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் குவித்துள்ளது. யாதவ் 72 ரன்களும், இஷான்கான் 58  ரன்களும் எடுத்துள்ளனர்.
 
ராஜஸ்தான் தரப்பில் 19வது ஓவரை வீசிய ஆர்ச்சர் அந்த ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். குல்கர்னி 2 விக்கெட்டுக்களையும் உனாகட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியினர் இன்னும் சில நிமிடங்களில் களமிறங்கவுள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்