சூர்யகுமார் யாதவ் அபார சதம்.. ஐதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை..!

Siva
செவ்வாய், 7 மே 2024 (06:57 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடிய நிலையில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் அபார சதம் அடித்ததை அடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் மும்பை அணியின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் எட்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெட் 48 ரன்கள் எடுத்தார்

இதனை அடுத்து 174 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய நிலையில் இசான் கிஷான், ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆன நிலையில் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 102 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்
 
இதையடுத்து 17.2 மூன்று விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்த மும்பை அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் மும்பை அணி 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பதும் குஜராத் அணி கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்