மகளிர் ஐபிஎல்: மும்பை அணிக்கு 3வது வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (07:48 IST)
மகளிர் ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி  பெங்களூரு அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 132 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை மகளிர் அணி 15.1  ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது

இந்த போட்டியின் மூலம் மும்பை அணி மொத்தம் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது

டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் பெங்களூரு அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணி இன்னும் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பதால் கடைசி இடத்தில் உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்