கண்ணை பறிக்கும் கலர்... தோனி வாங்கிய மஞ்சள் வின்டேஜ் கார்!!

வியாழன், 20 ஜனவரி 2022 (20:50 IST)
பிக் பாய் டாய்ஸ் நடத்திய ஆன்லைன் ஏலத்தில் 1971 லேண்ட் ரோவர் சீரிஸ் ஸ்டேஷன் வேகனுக்கான ஏலத்தை எம்எஸ் தோனி வென்றார். 

 
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு கார் மற்றும் பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது ரகசியம் அல்ல. அவர் ஏற்கனவே வைத்திருந்த வாகனங்களின் தொகுப்பில் இப்போது மற்றொரு வாகனத்தைச் சேர்த்துள்ளார். ஆம், சமீபத்தில் பிக் பாய் டாய்ஸ் நடத்திய ஆன்லைன் ஏலத்தில் 1971 லேண்ட் ரோவர் சீரிஸ் ஸ்டேஷன் வேகனுக்கான ஏலத்தை எம்எஸ் தோனி வென்றார். 
 
தோனி ஏலத்தில் வாங்கிய லேண்ட் ரோவர் சீரிஸ் 3 ஸ்டேஷன் வேகன் மிகவும் அரிதான ஒன்றாகும். மஞ்சள் மற்றும் வெள்ளை என இரட்டை டோன் கொண்ட கார். இது மிகவும் பிரபலமான லேண்ட் ரோவர் சீரிஸ் கார்களில் ஒன்றாகும். இதனை பிரிட்டிஷ் வாகன உற்பத்தியாளர்கள் 1971 - 1985 க்கு இடையில் 440,000 யூனிட்களுக்கு மேல் உருவாக்கினார். 
 
பிக் பாய் டாய்ஸ் ஏலத்தில் வோக்ஸ்வாகன் பீட்டில் உட்பட ஏராளமான வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டது. ஏலம் ரூ 1 லட்சத்தில் தொடங்கி ரூ 25 லட்சம் வரை சென்றது. இந்த குறிப்பிட்ட ஏலத்தில் மொத்தம் 19 கார்கள் ஏலம் விடப்பட்டன. மேலும் வாகனங்களின் பட்டியலில் ரோல்ஸ் ராய்ஸ், கேடிலாக்ஸ், ப்யூக்ஸ், செவர்லேட்ஸ், ஆஸ்டின்ஸ், மெர்சிடிஸ் ஆகியவையும் இருந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்