மெண்டாராக களத்தில் இறங்கிய தோனி

திங்கள், 18 அக்டோபர் 2021 (12:01 IST)
இந்திய அணியினருடன் நேற்று இணைந்த தோனி வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். 

 
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24 ஆம் தேதி சந்திக்கிறது. இதனிடையே உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு ஆலோசகராக செயலாற்றும்படி தோனியிடம் கேட்கப்பட்ட நிலையில் தோனி அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். 
 
டி20 உலகக் கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டம் இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணியினருடன் நேற்று இணைந்த தோனி வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
இந்திய அணிக்கு ஆலோசகராக செயலாற்றுவதற்கு தோனி பணம் எதுவும் வேண்டாம் என வாங்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்