கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு!

ஞாயிறு, 6 மே 2018 (17:47 IST)
முதல் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் குவித்தது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்ரைய முதல் போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விளையாடி வருகிறது. டஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் லிவிஸ் அதிராடியாக விளையாடி மும்பை அணி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
 
சூர்யகுமாட் யாதவ் 39 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய ரோகித் கிருணல் பாண்டியா ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர். ஹர்திக் பாண்டியா ஒருபக்கம் அதிரடியாக விளையாடினார். 20 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். 
 
இதன்மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்