3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்தில் தென்னாப்பிரிக்கா

வியாழன், 3 அக்டோபர் 2019 (17:45 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியின் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்தார். அவர் அடித்த 215 ரன்களும்,ரோகித் சர்மா எடுத்த 176 ரன்களும் தான் இந்திய அணியின் மெகா ஸ்கோருக்கு காரணம். இதனையடுத்து 136 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 8வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் மார்க்கம் விக்கெட்டை இழந்தது. இதனை அடுத்து 15வது ஓவரில் பிரவுன் விக்கெட்டையும், 18-வது ஓவரில் டேனி விக்கெட்டையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது. தற்போது அந்த அணி முதல் இன்னிங்சில் 463 ரன்கள் பின்னடைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அவர் 8 ஓவர்கள் வீசி நான்கும் மெய்டன்களுடன் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும், ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்