கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Siva

ஞாயிறு, 4 மே 2025 (19:25 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறியது. இதில் கொல்கத்தா அணி ஒரே ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றத்.
 
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. ரசல் மிக அபாரமாக விளையாடி 25 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.
 
இதனை அடுத்து 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடிய நிலையில், இருபது ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் பராக் 95 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில் கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,
 
முதல் இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே வந்தன.
 
மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸ்,
 
நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி,
 
ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடிக்கப்பட்டது.
 
இதனால் கடைசி பந்தில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலை உருவானது. ஆனால் அந்த பந்தில் ஒரு ரன் எடுத்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது ரன் அவுட் ஆனதால் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.
 
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 11 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்