பிரேசில் நாட்டு கால்பந்து அணியின் ஜாம்பவானும், கால்பந்தின் கடவுளுமாக போற்றப்படுபவர் பீலே. புற்றுநோய் பாதிப்படைந்த பீலே தனது 82வது வயதில் கடந்த டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு பிரேசிலின் தேசிய துக்கமாக அனுசரிக்கப்பட்டது.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்டு விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை பொதுமக்கள் அங்கே பீலேவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் அவரது உடல் அப்பகுதியின் வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெக்ரோபோல் எகுமெனிகா கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. பீலேவின் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் அவ்விடத்தில் குவிந்துள்ளனர்.