சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் விலகல்… அவருக்குப் பதில் இவரா?

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (09:21 IST)
ஐபிஎல் தொடரில்  மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் கைல் ஜேமிசனும் ஒருவர்.

ஆனால் அவரை மிகப்பெரும் தொகைக்கு ஏலம் எடுத்த பெங்களூர் அணி அவரை அடுத்த சீசனிலேயே கழட்டிவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அவரை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் காயம் காரணமாக தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இலங்கை அணியின் வீரர் தனுஷா குணதிலகா சி எஸ் கே அணிக்காக எடுக்கப்படுவார் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்