அதையடுத்து பேட் செய்து வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 448 ரன்கள் சேர்த்து ஐந்து விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. இந்த இன்னிங்ஸில் கே எல் ராகுல், துருவ் ஜுரேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் சதமடித்து அசத்தினர்.
இந்த இன்னிங்ஸில் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்த ஜடேஜா ஒரு முக்கியமான சாதனையையும் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் விளாசிய ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் இதுவரை 90 சிக்சர்கள் விளாசியுள்ளார். முதல் இடங்களில் 90 சிக்ஸர்களோடு ரிஷப் பண்ட் மற்றும் சேவாக், இருக்க மூன்றாம் இடத்தில் ரோஹித் ஷர்மா 88 சிக்ஸர்களோடு உள்ளார்.