குங்ஃபூ பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு- "லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சங்கமம்"சார்பாக பாராட்டு!

J.Durai

திங்கள், 18 மார்ச் 2024 (07:42 IST)
சென்னை கே.கே.நகர் நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் டீனோ, தற்காப்பு கலையான ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ  பயிற்சியளித்து வருகிறார்.
 
இதில் சுமார் 20 மாணவ-மாணவிகள் ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த பயிற்சியானது 3 மாதத்திற்கு ஒரு முறை தகுதி தேர்வு அடிப்படையில்  வெற்றி பெற்றவர்களுக்கு கலர் கிரேட் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 
இதில் முக்கியமாக கருதப்படும் பிளாக் பெல்ட் 3 வருட பயிற்சிக்குப் பின் தேர்வானவர்களுக்கு வழங்கப்படும்.
 
இந்த பிளாக் பெல்ட்  தேர்வில் வெற்றி பெற்ற  மீனா,இவியா,சரண் ஆகிய மூன்று பேருக்கும் சென்னை லயன்ஸ் கிளப் சங்கமும் சார்பாக சால்வை அணிவித்து மாணவர்களை கௌரவப்படுத்தினர்.
 
இதனை தொடர்ந்து மாணவ- மாணவியர்கள் தங்களது பெற்றோர்களிடம் ஆசி பெற்று கொண்டு
 
ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ தற்காப்புக் கலையின்  இந்தியாவின் முதன்மை பயிற்சியாளர் நாகராஜனிடம்  பிளாக் பெல்ட் மற்றும்  சான்றிதழ்களை கொண்டனர்.
 
பின்னர் மாணவர்கள் முதன்மை ஆசிரியர் நாகராஜன் முன்னிலையில்  இந்த கலையை ஒருபோதும் தவறான வழிகளுக்கு உபயோகப்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்