தோனி இருப்பதால்தான் கோஹ்லி சிறந்த கேப்டன் – கும்ப்ளே கருத்து

புதன், 20 மார்ச் 2019 (09:06 IST)
இந்திய அணியில் தோனி இருப்பதால்தான் கோஹ்லியால் சிறப்பாக விளையாட முடிகிறது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே தெர்வித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வரும் தோனி நெருக்கடியான நேரங்களில் கோஹ்லிக்கு யோசனைகள் தந்து சிறப்பாக செயல்பட உதவுகிறார். ஆனால் சமீபத்திய ஆட்டத்திறன் குறைபாடுகளால் அவருக்கான மாற்று வீரர்களை தேட வேண்டிய கட்டாயத்திலும் இந்திய அணி உள்ளது. தோனி தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பதற்கு அவரது ஆட்டத்திறனை விட தலைமைப்பண்பே காரணம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய முன்னாள் பந்துவீச்சாளரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘தோனி இருக்கும் போது விராட் கோலி நல்ல கேப்டன் என்று கூறுவதை விட தோனியுடன் கோலி சவுகரியமாக உணர்கிறார் என்றுதான் கூறுவதே பொருந்தும்.  தோனியின் ஆலோசனைகள் கோலியை சிறப்பாக செயல்பட உதவுகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தோனி ஸ்ட்ம்புக்கு பின்னால் இருப்பதால் பவுலர்கள் பற்றி அதிகம் அவருக்கு தெரிகிறது.  கோலி பவுண்டரியில் நின்று பீல்ட் செய்யும் போது தோனிதான் பவுலர்களிடம் பேசுகிறார். தலைமை என்பது தோனிக்கு இயல்பாக உள்ளது. இது போல  தோனியை நம்பித்தான் விராட் கோலி செயல்படுகிறார். ஆஸி.க்கு எதிராக கடைசி 2 போட்டிகளில் எம்.எஸ். இல்லை என்றவுடன் கோலி நெருக்கடிக்குள்ளானார்’ எனக் கூறியுள்ளார்.

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது அவருக்கும் கோஹ்லிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதனால் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்