கடைசி ஓவர்… இரண்டு விக்கெட்! ஷமியின் அற்புதத்தால் டை ஆன மேட்ச்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (16:07 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இதனையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையே 2வது  டி20 போட்டி கடந்த 26 நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இதனையடுத்து இன்று மூன்றாவது டி 20 போட்டி , ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.து. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி  கேப்டன் வில்லியன்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட்  இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 65, விராட் கோலி 38, ராகுல் 27 ரன்கள் எடுத்தனர்.  இதனால் இந்திய அணி, 5 விக்கெட்  இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணியில் மற்ற வீரர்கள் வழக்கம்போல விளையாட கேப்டன் வில்லியம்ஸன் மட்டும் இந்திய பவுலர்களை நாலாப்புறமும் கிழித்தெடுத்தார். இதனால் அந்த அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் வெற்றி என்ற நிலையில் ஷமி வீசிய முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார் டெய்லர். அடுத்த பந்தில் வில்லியம்சன் அவுட் ஆக ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கடுத்த பந்தில் ரன்கள் எடுக்க முடியவில்லை. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க கடைசி பந்தில் டெய்லர் அவுட் ஆக ஆட்டம் டை ஆனது. அதனால் சூப்பர் ஓவர் மூலம் முடிவை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்