இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை வீரராக உருவாகி வந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கேப்டனோடும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாக இருந்தால் உங்களுக்கு எல்லா வகையான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கும். நான் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு திடீர் வெறுப்பால் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.