அமித்ஷாவை சந்தித்த கங்குலி: பிசிசிஐ பதவி இப்படிதான் கிடைத்ததா?

செவ்வாய், 15 அக்டோபர் 2019 (10:07 IST)
பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 
 
பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருந்த நிலையில் நேற்று பிசிசிஐயின் புது தலைவர், பிசிசிஐயின் புது செயலாளர், பிசிசிஐயின் புது பொருளாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். 
 
அந்த வகையில், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜே ஷா புதிய செயலாளராகவும், பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் புதிய பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். 
கங்குலி புதிய பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள செய்தி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 
 
ஆம், கடந்த சனிக்கிழமை கங்குலி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தாகவும், இப்படித்தான் போட்டியின்றி கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி எந்த அளவு உண்மை என தெரியாத நிலையில் இச்செய்தி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்