தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சவுரவ் கங்குலி பின்வருமாறு பேசினார், போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், உலக கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய அமைப்பாக இருப்பதால் அதிக பொறுப்பு இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாகும் எனவே இந்த பதவி சவாலாக இருக்கும்.