ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவரா? விராத் கோலி ரசிகர்கள் அதிருப்தி..!

Mahendran
வியாழன், 13 பிப்ரவரி 2025 (12:10 IST)
ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது 
 
2024 ஆம் ஆண்டின் ஆர்சிபி அணியின் கேப்டனாக டூபிளஸ்சி செயல்பட்டார். அதற்கு முன்னர் விராட் கோலி அணியை வழிநடத்தி வந்தார் என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் இன்று புதிய கேப்டன் அறிவிக்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் கூறிய நிலையில் சற்றுமுன் ரஜத் படிதார் கேப்டன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலி ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஆர்சிபி அணியில் உள்ள வீரர்கள் பின்வருமாறு:
 
விராட் கோலி, ரஜத் படிதார், யஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் தார், சுயாஷ் சர்மா, க்ருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பண்டேஜ், எல். ஸ்வஸ்திக் சிக்கரா, அபிநந்தன் சிங், மோஹித் ரதி 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்