நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 217 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளோடு முதல் இடத்துக்கு சென்றுள்ளது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி பேட் செய்யும் போது ஷிம்ரான் ஹெட்மெய்ர் அடித்த pull ஷாட் பந்து மிக வேகமாக சென்றது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் லெக் சைடில் பீல்டிங் நின்ற சூர்யகுமார் அபாரமாகக் கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச்சைப் பார்த்த சக வீரர்களாலேயே அதை நம்பமுடியவில்லை. கேமராக் கூட பந்தை ட்ராக் செய்ய முடியாமல் பவுண்டரிக்குப் போயிருக்கும் என பவுண்டரி லைனுக்கு சென்று பின்னர் திரும்பி வந்து சூர்யகுமாரிடம் கேட்ச் ஆகி இருப்பதைக் காட்டியது.