6வது தங்கத்தை கைப்பற்றி 7வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (15:57 IST)
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியா தனது 6வது தங்கத்தை கைப்பற்றியது.
8-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 
 
பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர்கள் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி,  13 வெண்கலம் வென்றிருந்தனர்.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ்  போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக் - யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 
 
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்று, 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன்  பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்