இலங்கை வந்துள்ள அணி இரண்டாம் தர அணியல்ல… ரணதுங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதில்!

சனி, 3 ஜூலை 2021 (11:25 IST)
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா இந்தியா தனது இரண்டாம் தர அணியை அனுப்பி நம்மை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் மற்றொரு அணி இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் மற்றொரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என்றும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இலங்கை அணியின் முன்னாள் உலகக்கோப்பை வென்ற கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா ‘இரண்டாம் தர அணியை அனுப்பி, நம்மை அவமானப்படுத்தியுள்ளனர். தொலைக்காட்சி வருவாய்க்காக இதை ஒத்துக்கொண்ட நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே இதற்காக நாம் கண்டிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் இவருக்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் வாரியம் ‘இலங்கைக்கு வந்துள்ள அணி இரண்டாம் கட்ட அணி இல்லை. இதில் உள்ள 20 வீரர்களில் 14 பேர்கள் ஏற்கனவே மூன்று வடிவிலான போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார்கள்.’ என பதிலளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்