ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 14 அன்று நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ், இந்திய அணி வீரர்களுக்கு சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை பாராட்டிய கபில் தேவ், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வீரர்களின் கவனம் வெளிப்புற விஷயங்களால் சிதறக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
"இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற விஷயங்களை பற்றி சிந்திக்காமல், விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினால், நிச்சயமாக வெற்றி இந்தியாவுக்கே" என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். அணியின் தற்போதைய ஃபார்ம் மற்றும் வீரர்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவை, இந்த நம்பிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளன.