2வது டி20 போட்டி: இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!

திங்கள், 15 மார்ச் 2021 (19:20 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக கேப்டன் விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மிகவும் மெதுவாக பந்து வீசியதாக கூறப்பட்டதை அடுத்து இந்திய அணியின் வீரர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகத்தில் உள்ளனர் 
 
நேற்றைய போட்டியில் முதலாவதாக பந்துவீச்சில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாகவே 20 ஓவர்கள் வீச எடுத்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்