மியான்மரில் ராணுவ சர்வாதிகார ஆட்சி! இந்தியாவில் அடைக்கலம் தேடும் மக்கள்!

திங்கள், 15 மார்ச் 2021 (08:16 IST)
மியான்மரில் ஜனநாயக கட்சி ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சி செய்துவரும் நிலையில் மியான்மர் மக்கள் பலர் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மரில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த ஆங் சான் சூ கியின் ஆட்சியை கலைத்த ராணுவம் மியான்மரில் சர்வாதிகார ஆட்சியை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் பலர் வீதிகளில் போராடி வரும் நிலையில் பலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மியான்மரில் சராசரி வாழ்க்கையை இழந்த மக்கள் பலர் 1643 கிலோமீட்டர்கள் தாண்டி இந்தியாவிற்குள் அடைக்கலம் புகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையில் டியூ ஆற்றைக் கடந்து வந்த 116 அகதிகளை எல்லையில் ராணுவம் பிடித்துள்ளது. இதில் மியான்மரை சேர்ந்த 8 காவலர்களும் அடக்கம். இவர்களை மீண்டும் மியான்மர் அனுப்ப இந்திய ராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் எல்லை கடந்து இன்னும் பலர் அகதிகளாக வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்