ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.