அபராதத்த சங்கத்துல இருந்து எடுத்து கட்டு – அத்துமீறிய கோஹ்லிக்கு அபராதம் விதித்த ஐசிசி

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (15:34 IST)
நேற்று நடந்த உலக கோப்பை போட்டியில் நடுவரிடம் வரம்பு மீறி பேசியதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லிக்கு அபராதம் விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் 50வது முறையாக வெற்றிபெற்றுள்ளது இந்தியா.
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பந்து வீசிய போது நடுவருக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் கருத்து வேறுபாடு உண்டானது. இதனால் கோஹ்லி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மற்ற வீரர்கள் சமாதானப்படுத்தி அவரை அழைத்து சென்றனர்.

மைதானத்தில் நடுவரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காக கேப்டன் கோஹ்லிக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம். அதன்படி போட்டி கட்டணத்தில் 25% தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். அவர் கட்டவில்லையென்றால் அவர் தரப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் கட்ட வேண்டும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்