வங்கதேசத்திற்கு எதிரான டி 20 தொடர்.. மூன்றிலும் வெற்றி பெற்று இந்தியா சாதனை..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (07:28 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் மூன்றிலும் இந்தியா வெற்றி பெற்று சாதனை செய்துள்ளது
 
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ஏற்கனவே நடந்த இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா நேற்று மூன்றாவது டி20 போட்டியில் மோதியது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் அடித்திருந்தது.

சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 111 ரன்களும், சூரியகுமார் யாதவ் 75 ரன்களும் எடுத்திருந்தார்கள். இதனை அடுத்து 298 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 133 ரன்கள் என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா மற்றும் வங்கதேச தொடரில் மூன்றிலும் தோல்வி அடைந்து வங்கதேச அணி ஒயிட்வாஷ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்