இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல? இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இடைஞ்சல்!

Prasanth K

ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (18:26 IST)

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்து வரும் நிலையில் பூச்சிகள் தொல்லையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

 

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கை நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை பலமாக கட்டுப்படுத்தியுள்ளது.

 

தற்போது 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. தீப்தி சர்மா, ஸ்னேகா ராணா நிதாசமாக விளையாடி வந்தாலும் ரன்கள் சேராமல் இருப்பது கவலையளிக்கிறது. இதற்கிடையே மைதானத்தில் பூச்சிகளின் தொல்லை அதிகமானதால் போட்டி நிறுத்தப்பட்டு பூச்சி மருந்து அடிக்கும் பணிகள் நடந்தன. தற்போது மீண்டும் போட்டி தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்காக ரசிகர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்