மகளிர் ஆசிய கோப்பை: ஒரு பந்து மீதம் இருக்கையில் இலங்கை த்ரில் வெற்றி.. சோகத்தில் பாகிஸ்தான்..!

Mahendran

சனி, 27 ஜூலை 2024 (09:07 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 141 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் ஒரே ஒரு பந்து மீ தம் இருக்கையில் 141 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது

 இந்த போட்டியில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த இலங்கை விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த நிலையில் கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

முதல் பந்தில் ரன் எடுக்காமல் இருந்த நிலையில், இரண்டாவது பந்தில் விக்கெட் விழுந்தது, மூன்றாவது பந்திலும் ரன் இல்லை . இதனை அடுத்து நான்காவது பந்தில் ஒரு ரன் மற்றும் ஐந்தாவது பந்தில் ஒரு வைடு எடுத்த நிலையில் மீண்டும் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.

 இந்த வெற்றியை அடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்