இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

vinoth

திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (08:07 IST)
சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் கொண்ட லெஜண்ட்ஸ் உலகக் கோப்பைத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியை யுவ்ராஜ் சிங் வழிநடத்துகிறார். இதில் சிறப்பாக  விளையாடிய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆனால் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட முடியாது என தற்போது இந்தியா லெஜண்ட்ஸ் அணி அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. பஹல்ஹாம் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்தியா லெஜண்ட்ஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்பட்டது.

இதையடுத்து நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட மறுத்ததை அடுத்து அடுத்த சீசனில் இருந்து இந்த தொடரில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தபோது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்