WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

vinoth

திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (08:12 IST)
நிகழ்கால டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் விளங்குபவர் ஜோ ரூட். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஓவலில் நடந்து வரும் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அவர் சதமடித்து அசத்தியுள்ளார். இது அவரின் 39 ஆவது சதமாகும். இந்த சதத்தின் மூலம் இங்கிலாந்து அணியை அவர் வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சதத்தின் மூலம் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் 6000 ரன்களை சேர்த்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்