500-ஐ நெருங்கும் இந்தியாவின் ஸ்கோர்.. இன்னிங்ஸ் வெற்றி கிடைக்குமா?

Siva

வெள்ளி, 8 மார்ச் 2024 (16:02 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் போர் 500-ஐ   நெருங்கி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் சற்றுமுன் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்துள்ளது

ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சதம் அடித்ததை அடுத்து படிக்கல் மற்றும் சர்ப்ராஸ் கான் அரை சதம் அடித்துள்ளனர். இந்த நிலையில் இன்னும் 65 ரன்கள் எடுத்தால் 500 ரன்கள்  என்ற நிலையில் உள்ள இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியை விட 221 ரன்கள் முன்னிலையில் உள்ளது

எனவே இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் நான்காவது வெற்றி இந்தியாவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்