பல சாதனைகளை உடைத்த ரோஹித் ஷர்மாவின் இன்றைய சதம்!

vinoth

வெள்ளி, 8 மார்ச் 2024 (13:09 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து ஆடி வரும் இந்திய அணி தற்போது வரை 3 விக்கெட்களை இழந்து 313 ரன்கள் சேர்த்து 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அவுட் ஆன நிலையில் கில்லுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இருவரும் அபாரமாக ஆடி அடுத்தடுத்து சதமடித்தனர்.

ரோஹித் ஷர்மா சர்வதேச போட்டிகளில் அடிக்கும் 48 ஆவது சதம் இதுவாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் மூன்றாம் இடத்தை சமன் செய்துள்ளார் ரோஹித். முதல் இரண்டு இடங்களில் சச்சின் மற்றும் கோலி ஆகியோர் உள்ளனர்.

சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரராக களமிரங்கி அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்து 43 சதங்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் வார்னர்(49) மற்றும் சச்சின்(45) ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்