கடந்த 26 ஆம் தேதி ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்திருந்ததால், 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், நட்சத்திர ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனை அடுத்து, தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தனியாக போராடி 84 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் அவுட் ஆனவுடன், இந்திய அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளும், இந்தியா 1 வெற்றியும் பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.