இந்த தொடர் முழுவதும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் செயல்திறன் மிக மோசமாக உள்ளது. அவர் இந்த தொடரில் இதுவரை 32 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அவர் மொத்தமாக சந்தித்ததே 100 பந்துகளுக்குள்தான். அதனால் இந்த மோசமான ஃபார்ம் காரணமாக அவர் இன்றைய போட்டி முடிந்ததும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.