9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பு.. ஆரம்பத்திலேயே திணறும் இந்திய அணி..!

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (10:20 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இந்திய அணி விக்கெட்டுகள் ஆரம்பத்திலேயே விழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்  தற்போது நடைபெற்று வரும் நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதல் சில ஓவர்களில் அடுத்தடுத்து மூன்று விக்கட்டுகளை இந்திய அணி இழந்து திணறி வருகிறது 
 
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நான்காவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து ஆறாவது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் சுப்மன் கில் அவுட் ஆன நிலையில் சற்று முன் ரஜத் படிதார் ஐந்து ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார் 
 
இதனை அடுத்து இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட்  இரண்டு விக்கெட் களையும் ஜேம்ஸ் ஹார்ட்லி ஒரு விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்