ஐசிசி டி20 தரவரிசை: மூன்றாவது இடத்தைப் பிடித்த இந்தியா

புதன், 9 செப்டம்பர் 2020 (07:19 IST)
ஐசிசி டி20 தரவரிசை: மூன்றாவது இடத்தைப் பிடித்த இந்தியா
ஐசிசி அவ்வப்போது உலக கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருவது தெரிந்தது. அந்த வகையில் இன்று காலை ஐசிஐசிஐ டி20 அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது
 
இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இங்கிலாந்து அணி 271 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன இந்திய அணி 266 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், ஆகிய நாடுகளின் அணிகள் 4 முதல் 10ஆம் இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவுக்கும் இரண்டாம் இடத்திலுள்ள இங்கிலாந்துக்கும் இடையே 5 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது என்பதும் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே 9 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது என்பதால் இந்திய அணி விரைவில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்