4 முறை 275க்கு மேல் இலக்கு கொடுத்த ஐதராபாத் அணி.. 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Siva

திங்கள், 26 மே 2025 (06:55 IST)
ஐபிஎல் வரலாற்றில் நான்கு முறை எதிர் அணிக்கு 275 ரன்களுக்கு மேல் இலக்கு கொடுத்த அணியாக ஹைதராபாத் அணி சாதனை செய்துள்ள நிலையில், நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய போது 278 ரன்கள் இலக்கு கொடுத்து, 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ரன்களை குவித்து, ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியில் சாதனை செய்தது. நேற்று நடந்த கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது.
 
கிளாசன் மிக அபாரமாக விளையாடி 105 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து, 279 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 168 ரன்கள் ஆகி ஆல் அவுட் ஆகி, 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில், ஏற்கனவே 286 ரன்கள் ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல், கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 287 ரன்கள் இலக்காக கொடுத்தது என்பதும், மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் இலக்காக கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை.
 
ஐபிஎல் வரலாற்றில் முதல் ஐந்து அதிகபட்ச ஸ்கோர்களில் நான்கு அதிகபட்ச ஸ்கோர்களை ஹைதராபாத் அணி தான் வைத்துள்ளது என்பது சாதனையாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்