காலி மைதாந்த்தில் கோலி எப்படி விளையாடுவார்? ஆஸ்திரேலிய வீரர்கள் ஆர்வம் !

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (08:36 IST)
கொரோனா காரணமாக தற்போது உலகெங்கும் உள்ள கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் காலி அரங்கில் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா நிலவரம் கட்டுக்குள் வந்தாலும் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவது அபாயகரமான ஒன்றாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு மைதானங்களில் ஆள் இல்லாமல் தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்கும் வண்ணம் போட்டிகள் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களான நாதன் லயன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் நடத்திய விவாதத்த்தில் ‘இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆஷஸ் தொடருக்கு நிகரானதாக இருக்கும். அந்த தொடரை காலி மைதானத்தில் விளையாடப் போகிறோமா அல்லது ரசிகர்கள் முன் விளையாடப் போகிறோமா என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை.

களத்தில் ரசிகர்கள் தரும் ஊக்கம் இந்திய கேப்டன் கோஹ்லிக்கு பக்கபலமாக அமையும். ஆனால் காலி மைதானத்தில் நடந்தால் அப்போட்டி வித்தியாசமாக இருக்கும். கிரிக்கெட் அரங்கின் 'சூப்பர் ஸ்டார்' என்பதால், சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக பக்குவப்படுத்திக் கொள்வார். கடந்த முறை ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் நாம் தொடரை இழந்தோம். இந்த முறை சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்