முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவிக்கு புற்றுநோய் குணமாகி விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சத்தீஸ்கர் சிவில் சமூகம், ரூபாய் 850 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் பிழைக்க வாய்ப்பு இல்லை என டாக்டர்கள் கைவிட்ட நிலையில், 40 நாள் சிகிச்சைக்கு பின் குணமாகிவிட்டார் என்றும் தெரிவித்தார்.
கடுமையான உணவு கட்டுப்பாடு, மஞ்சள் வேப்பம் தண்ணீர், ஆப்பிள் வினிகர், எலுமிச்சம் தண்ணீர் ஆகியவை உணவாக மற்றும் மருந்தாக கொடுக்கப்பட்டதாகவும், சர்க்கரையை முற்றிலும் தவிர்த்ததால் அவருக்கு தற்போது புற்றுநோய் முற்றிலும் குணமாகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக, சத்தீஸ்கர் சிவில் சமூகம் என்ற அமைப்பு, அவர் வெளியிட்ட தகவலுக்கு ஆதாரங்களைத் தொகுக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புற்றுநோயிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும், இல்லையெனில் 850 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இந்த நோட்டீஸ்க்கு பதிலளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.