என் பந்துகளைக் கணிக்க முடியாது… ஹாட்ரிக் நாயகன் ஹர்ஷல் படேல்!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:22 IST)
நேற்றைய போட்டியில் ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி பெங்களூரு அணியை வெற்றிப் பெற வைத்தார் ஹர்ஷல் படேல்.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலாவதாக பேட்டிங் செய்த ஆர்சிபி சிறப்பாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை ஸ்கோர் செய்தது. அடுத்ததாக களமிறங்கிய மும்பை அணியால் ஆர்சிபியின் ஃபீல்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. 18 ஓவர்களே முடிந்திருந்த நிலையில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் வெற்றி மும்பை வசம் இருந்தாலும் ஆர் சி பி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி மும்பையை வீழ்த்தினர். அதிலும் ஹர்ஷல் படேல் ஒரே ஓவரில் ஸ்லோ பால்களில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரின் விக்கெட்களை ஹாட்ரிக் எடுத்து ஆட்டத்தையே மாற்றினார். இந்நிலையில் வெற்றிக்கு பின் பேசிய அவர் ‘என்னுடைய ஸ்லோ பால்களை கணிக்க முடியாது’ என பெருமிதமாக சொல்லியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்