கதாநாயகியாக அறிமுகமாகும் ராஜீவ் மேனனின் மகள்!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:11 IST)
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார்.

இயக்குனர் ராஜிவ் மேனன் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் அறிமுகமானவர். அவர் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகண்டேன் மற்றும் மின்சாரக்கனவு ஆகிய படங்கள் கவனத்தை பெற்றன. அதுமட்டுமில்லாமல் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவரின் மகள் சரஸ்வதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளாராம். ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்