டிஎன்பிஎல் போட்டியில் கவுதம் மேனன் மகன் அறிமுகம்: முதல் பந்திலேயே விக்கெட்!
திங்கள், 27 ஜூன் 2022 (07:40 IST)
டிஎன்பிஎல் போட்டியில் கவுதம் மேனன் மகன் அறிமுகம்: முதல் பந்திலேயே விக்கெட்!
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சமீபத்தில் சேலம் மற்றும் நெல்லை அணிகளுக்கு இடையே நடந்த டிஎன்பிஎல் போட்டியில் நெல்லை அணியில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் மகன் ஆர்யா யோஹன் அறிமுகமானார்
அவர் இந்த போட்டியில் பந்து வீசிய போது முதல் பந்திலேயே சேலம் அணியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார் என்பதும் இதனை அடுத்து நெல்லை அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் களமிறங்கிய கவுதம்மேனன் மகனுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் பல விருதுகளை பல பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது