ஜோராவுக்காக ஜம்முகாஷ்மீர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கவிதை ஒன்றை கண்ணீரால் எழுதி தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஜோராவின் படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவர் என்ன படிக்க விரும்பினாலும் எத்தனை லட்சம் செலவு ஆனாலும் அதற்கு நான் பொறுப்பு என்று தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். என்னால் உனது தந்தையை கண்முன் நிறுத்த முடியாது. ஆனால் உன் தந்தையின் கனவை நிஜமாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.